பிக்பாஸில் வெற்றி பெற்ற தொகையை ஆரி என்ன செய்ய போகிறார் தெரியுமா? அட என்ன மனுஷன்யா !! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!! வெளிவந்த தகவல் மற்றும் புகைப்படங்கள்!!

Actress videos

மற்ற நாடுகளில் எப்படியோ இந்தியாவில் சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட மற்ற சின்னத்திரை நிகழ்சிகளை விட அதிக பொருட் செலவிலும் அதிக பட்ஜெட்டிலும் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே. கிட்டத்தட்ட வருடத்திற்கு நூறு நாட்கள் மட்டுமே ஒளிபரப்பபட்டாலும் அந்த மூன்று மாதங்களும் டி ஆர் பி யில் முதலிடத்தை வகிப்பது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

ஏற்கனவே பல மொழிகளில் இந்தியாவில் ஒளிபரப்பாகி இருந்தாலும் தமிழில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தான் ஒளிபரப்பப் பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே இதற்கு பல எதிர்ப்புகள் வந்து இருந்தாலும் மக்கள் போக போக இந்த நிகழ்ச்சியினை ரசித்து பார்க்க ஆரம்பித்தனர்.

சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர் என பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படி இந்த முறை கொரோனா ஊரடங்கு காரணமாக நாலாவது சீசன் சில மாதங்கள் தள்ளி போனாலும் கொண்டாட்டத்துடன் தொடங்கப் பட்டது. வழக்கம் போல இல்லாமல் தற்போது பல இளம் பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தனர்.

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும். பல போட்டியாளர்களும் வார வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற பல விமர்சனங்களும் ரசிகர்களால் வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட பாதி கட்டத்திற்கு பாலாஜியும் ஆரியும் செய்யும் விவாதங்கள் பற்றி இணையத்தில் டிரண்டாக கமல்ஹாசன் அதனை முடிவுக்கு கொண்டு வந்தார், இந்நிலையில் போன வாரம் இந்த நிகழ்ச்சிக்கான இறுதி போட்டி நடை பெற்று அனைவரும் எதிர்பார்த்தது போல மக்கள் நாயகன் ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யபட்டார்.

பல கோடி ரசிகர்களுக்கும் அவர் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளித்த நிலையில் ஏற்கனவே சமுதாய சீர் திருத்தங்களுக்காகவும், இயற்கை விவசாயத்திற்காகவும் குரல் கொடுத்து வரும் அவர் தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு பங்கை மரம் நடுவதற்காகவும்,

ஆர்கானிக் விதைகளை வாங்குவதற்காகவும் செலவழிக்க உள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் இனி நாம் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதை விட்டுவிட்டு தமிழில் கையெழுத்திடவும் பலருக்கும் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகளுக்கான அறிவுப்புகள் விரைவில் வரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.