தமிழ் சினிமாவில் 75 படங்களுக்கு மேல் நடித்த நடிகையாக 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கௌதமி. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
சந்தீப் பாத்தியா என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். சந்தீப் மூலம் பெற்ற மகள் சுப்புலட்சுமியுடன் தற்போது தனியாக வாழ்ந்தும் வருகிறார்.
இதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் தொடர்பு கிடைத்து ரிலேஷன்ஷிப்பில் இருந்து படங்களில் நடித்தும் வந்தார். இதன் பிறகு கௌதமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக முழுநேரமும் கமல்ஹாசன் தான் பார்த்து கொண்டுள்ளார். படவாய்ப்புகள் கிடைக்காமல் சீரியலிலும் சில குணச்சித்திர கதாபாத்திரங்களுலும் நடித்து வருகிறார்.
தற்போது மகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அதிகாரபூர்வமாக கமல் ஹாசனிடமிருந்து பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கௌதமி.
இந்நிலையில் கமல் கௌதமி என்று தான் தெரிந்த உலகிற்கு நடிகை கௌதமியின் கணவர் யார் என்று அறியாமல் வந்தது. தற்போது சந்தீப் கௌதமியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.