மீண்டும் திரும்பி வந்த செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக்ராஜ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Actress videos

TRPயில் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இதில் கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் கடந்த மாதம் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் வெளியானது.

இதன்பின் செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்திற்கு வேறொரு நடிகர் நடிக்க வந்தார். ஆனால் அதனை கார்த்திக்கின் ரசிகர்கள் ஏத்துக்கவில்லை. இந்நிலையில் பல நாட்கள் கழித்து நடிகர் கார்த்திக் ஒரு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் ” ஓரே சூரியன், ஒரே சந்திரன், ஒரு நியாயம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரின் ரசிகர்கள் திரும்ப வந்துட்ட தலைவா என்று சொல்லி, கொண்டாடி வருகின்றனர்.