என்னை யாரும் எதுவும் சொல்லாதீங்க. நான் போயிடுறேன்..! என்னை கழுவி ஊத்துனது போதும்.!

என்னை யாரும் எதுவும் சொல்லாதீங்க. நான் போயிடுறேன்..! என்னை கழுவி ஊத்துனது போதும்.!

News

இந்த தலைமுறையினர் மிகவும் கஷ்ட பட்ட வருடம் என்றால், 2020 என்றே கூறலாம். அதற்க்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸானது நாடு முழுவதும் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பள்ளிகள் இன்றளவும் திறக்கப்படாமல் இருந்துவரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வருகிறது.

அதிலும், இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் போன்ற மாதங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட சிரமப்பட்டு வந்தனர். பலரும் வேலை இழந்து, பிழைக்கவந்த இடத்தில் இருந்து சொந்த ஊருக்குச்சென்றனர். தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கூட தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் சூழ்நிலை உருவானது.

இந்தநிலையில் இந்த கொடுர வைரஸானது தற்போது குறைய துவங்கி, ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொதுமக்கள் தற்போது சாதாரண சூழ்நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்ற தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடத்தின் கடைசி நாள் நாளையுடன் முடிவடைகிறது. புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக “இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. என்னைய யாரும் எதுவும் சொல்லவேண்டாம்… நான் போயிடுறேன்.. என்னை கழுவி ஊத்துனது போதும்” என மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.