சைலன்டாக கொரோனா களத்தில் மாஸ் காட்டும் தல அஜித் !! விஜய் ரசிகர்களையும் பாராட்ட வைத்த செயல் !

News Uncategorized

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கூடிக் கொண்டே தான் வருகிறது, குறைந்தபாடில்லை. இதில், இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல . கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் உச்சத்தை தொட்டுள்ளது.  இதனால் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு மத்திய அரசு விதித்துள்ளது. தமிழ்நாட்டிலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த  இக்கட்டான சூழ்நிலையில் சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப்பலர் அரசுடன் கைகோர்த்து மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தல அஜித்தும் தன்னுடைய தக்க்ஷா (Dhaksha) அணியுடன் சேர்ந்து ட்ரோன் மூலம் சிவப்பு மண்டலங்களில் கிருமி நாசினி தெளிப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் டாக்டர் கார்த்திக் நாராயணன் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த செய்தியை கண்டு திரைத்துறையினர் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் என அனைவரும் அஜித் செயலை பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *