என்ன ஒரு நாய்-ஆ கூட என்ன மதிக்கல., என்னோட இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் இது தான்!!

Cinema News

சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடு திருப்பியுள்ள நடிகர் பொன்னம்பலம் தனக்கு 20 முறைக்கு மேல் த ற்கொ லை எண்ணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சண்டை கலைஞராக தன்னுடைய கெரியரை துவங்கி படிப்படியாக வி ல்ல னாக வளர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு வில்லனாக அவர் நடித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு பொன்னம்பலம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் உதவி செய்தனர்.

மேலும் பொன்னம்பலத்தின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்ளவதாக கமல்ஹாசன் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பொன்னம்பலம் தனக்கு 20முறைக்கு மேலாக த ற்கொ லை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் தான் சம்பாதித்த பணத்தினை சேமித்து வைக்காததது மிகப்பெரிய தவறு என்று கூறிய பொன்னம்பலம், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஸ்டண்ட் யூனியனில் இருந்து யாரும் வராதது பற்றியும் வருத்தம் தெரிவித்துள்ளார் அவர். ஸ்டண்ட் யூனியன் சங்கம் தன்னுடைய ஓய்வூதிய பணத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வாய்ப்புகள் குறைந்ததால் திரைப்படங்கள் நடிப்பதை பொன்னம்பலம் படிப்படியாக நிறுத்தி இருந்தாலும், கடைசியாக அவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் முக்கிய போட்டியாளராக இறந்தார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்தது, ஆனால் அவரால் அந்த நிகழ்ச்சியின் இறுதி வரை வர முடியவில்லை என்பது குறிபிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *