கோவையில் 3 நாட்கள் முழு ஊரடங்கு !! திருப்பூரில் விரைவில் முழு ஊரடங்கு வருமா ?? உஷார் மக்களே !!

News

கொரோனா பிரச்சனையானது நாடு முழுவதும் நாளுக்கு நாள் வலுவாகிக்கொன்டே போகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தினசரி உயர்ந்துகொண்டே போகிறது.

இந்தநிலையில் மாவட்டங்களின் வரிசையில் சென்னை வழக்கம்போல மற்ற மாவட்டங்களை தூக்கி சாப்பிட்டு தினமும் அதிகமான தொற்றை உறுதிப்படுத்துகிறது.மேலும் குறிப்பாக சென்னை அருகிலுள்ள பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

அந்தவகையில் அதிகமான பரவல் காரணமாக கோவையில் 3 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அந்தவகையில் நமது திருப்பூரில் நாளுக்கு நாள் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.15 நாட்களுக்கு முன்பு தொற்று அதிகமாக இல்லாமல் இருந்த ஒரே மாவட்டமாக இருந்த திருப்பூர் தற்போது 600 நபர்களை தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த காரணங்களால் விரைவில் திருப்பூரில் முழு ஊரடங்கு எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.அது 3 நாட்களா அல்லது ஒரு வாரமா என்பது பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.இந்த பரவலில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே சிறந்த வழி என தொடக்கம் முதல் கலெக்டர் கூறிவருகிறார்.வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.தேவையற்ற பயணங்களை தவிருங்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *