சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீ திவ்யா.இதன்பின் ஜீவா, வேலைக்கார துறை, காக்கி சட்டை, ஈட்டி, மருது என பல படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இப்படத்திற்கு பிறகு பெரிதும் தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது கைவசம் ‘ஒத்தைக்கு ஒத்த ‘ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் தமிழில் பிரபலமான நடிகையாக இருந்தாலும், தெலுங்கில் தான் இவர் நடிக்க துவங்கினார்.இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் திரைப்படத்தில், தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா.இதோ அந்த புகைப்படம்..