முதலாளிய அடிச்சா சும்மா விடுவோமா...! முதலாளியை அடித்தவுடன் காப்பாற்ற ஓடி வந்த யானை...!

முதலாளிய அடிச்சா சும்மா விடுவோமா…! முதலாளியை அடித்தவுடன் காப்பாற்ற ஓடி வந்த யானை…!

News videos

விலங்குகள் பல தன்னை வளர்ப்பவர்களிடம் அளவில்லாத பாசத்தைக் காட்டும். அதில் யானைகளுக்கும் முக்கிய இடம் உள்ளது. மற்ற விலங்குகள் காட்டும் பாசத்தை விட யானைகள் காட்டும் பாசம் நமக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தும். காரணம் யானையின் மிகப் பெரிய தோற்றம் தான்.

அவ்வளவு பெரிய விலங்கு எவ்வாறு குழந்தையைப் போல் மனிதர்களிடம் காட்டும் என்பது நமக்கு வியப்பிற்கு உரியது. இப்படி யானைகள் மனிதர்களிடம் காட்டும் அன்புகள் தற்போது செய்திகளாகவும் வெளிவந்து வைரல் ஹிட்டாகின்றன.

சிலநாட்களுக்கு முன்பு ரிவோல்டோ என்ற யானை தனக்கு உணவளித்தவர் இறந்தது கூட தெரியாமல் அவரை தேடி அலைந்தது. மற்றும் மேற்கு வங்க மாநிலம், லடாகுரி பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி அஹானாவை மற்ற யானைகளிடம் இருந்து காப்பாற்றியது.இந்த செய்திகள் அனைத்தும் யானைகளின் நல்ல குணத்தை மனிதர்களுக்கு காண்பித்தது.

அதே போல் தான் இங்கும் தன்னை பாசமாக வளர்த்த எஜமானை ஒருவர் பிடித்து அடிக்க வருகின்றார், இதனை தூரத்தின் நின்று பார்த்த யானை எஜமானை நோக்கி ஓடிவந்து அவருக்கு அரணாக நிற்கின்றது. இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே..