30 வயதில் தான் நான் என் வாழ்க்கையை அனுபவிக்கவே போகிறேன்…! அஜித் பட நடிகை வித்யா பாலன் ஓப்பன் டாக்

Actress Cinema News News

பாலிவுட் சினிமாவில் மட்டும் இல்லாது மற்ற மொழி சினிமாவில் கூட உடல் எடையை வைத்து பல நடிகைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு உடலை வைத்து அவமானப்படுத்தப்பட்டேன் என்று பிரபல நடிகை வித்யா பாலன் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் உடலை வைத்து அட்ஜெஸ்ட்மெண்ட்டும் நடந்துள்ளது என்றும் கூறி வந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தற்போதைய சினிமாவில் நடித்துக்கொண்டு வருகிறார். இணையத்தில் ரசிகர்களை கவரும் வண்ணமும் க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில், பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு தன்னுடைய அழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும், நான் நாற்பது வயதை கடந்த பிறகு தான் ஹாட்டாக உணர்கிறேன். பொதுவாகவே, பெண்கள் எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்கள் செக்ஸை என்ஜாய் செய்வது கூட இல்லை.

நான் இருபது முதல் முப்பது வயது வரை என் கனவை நோக்கி பயணித்தேன், முப்பது வயதிற்கு மேல் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே காலம் சென்றுவிட்டது, தற்போது, நாற்பது வயதை கடந்த பிறகு தான் நான் என வாழ்க்கையை அனுபவிக்கவே போகிறேன் என கூறியுள்ளார் வித்யா பாலன்.