தல அஜித்தின் புதிய வெர்சன் 2.0.. இணையத்தை கலக்கும் வெறிபிடித்த ரசிகனின் வீடியோ!

தல அஜித்தின் புதிய வெர்சன் 2.0.. இணையத்தை கலக்கும் வெறிபிடித்த ரசிகனின் வீடியோ!

Actress Cinema News videos

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்கள்தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய். எனவே தல தளபதி ரசிகர்களுக்கு இடையே போட்டா போட்டி நிலவி வருவது வழக்கம். அந்த வகையில் தளபதி விஜய்யின் ரசிகர்களால் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் படம்தான் மாஸ்டர். அண்மையில் தான் மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

எனவே மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு பதிலாக தல அஜித் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர் ஒருவர் வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தளபதி அஜித் இதுவரை நடித்துள்ள படங்களில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை வைத்து மாஸ்டர் படத்தின் டீசரில் உள்ள காட்சிகளையும் ஒன்றாக சேர்த்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாஸ்டர் பட டீஸரில் விஜய்சேதுபதி இருப்பது போல இந்த வீடியோவிலும் தல அஜித்துடன் விஜய் சேதுபதி இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மாஸ்டர் படத்தில் தல அஜித் நடித்து இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக உள்ள, இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.