எங்கப்பா இருக்காரு எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு..!!அஞ்சு ரூபா டாக்டர் பார்த்துஇருக்கோம்..!! ஒரு ரூபாய்க்கு கூடவா இருக்காங்க டாக்டர்..!! குவியும் லைக்ஸ்.!! எங்கே தெரியுமா.?

News

மருத்துவம் சேவையாக பார்க்கப்படுவது மறைந்து தற்போது மருத்துவம் வியாபாரமாக மாறிவரும் சூழ்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சில டாக்டர்கள் இந்த மண்ணில் உள்ளனர்.

அந்த வகையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சுசோவன் பானர்ஜி என்ற ஒரு டாக்டர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையில் அதிகமான நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக இவருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு இவருக்கும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் கொடுத்து கௌரவித்துள்ளது. பானர்ஜி கொல்கத்தாவிலுள்ள ஆர்கேநகர் மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவப் பட்டம், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் முதுகலை மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். லண்டனில் படித்து மருத்துவ டிப்ளமோ பெற்றா. ர் பின்னர் மூத்த பதிவாளராக இவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதனை அடுத்து திரும்பி மருத்துவராக பணியாற்ற தொடங்கினார்.

இவர் கிட்டத்தட்ட 57 ஆண்டுகளாக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வாக இவர் இருந்துள்ளார். இவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் பல ஆண்டுகளாக இவர் ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று சிகிச்சை அளித்துள்ளார். இதனால் ஒரு ரூபாய் டாக்டர் என்றும் இவர் பெயர் பெற்றுள்ளார்.

பல ஏழைக் குடும்பங்களுக்கு இவர் வாழும் கடவுளாகவே தெரிகிறா. ர் கின்னஸ் சாதனை குறித்து இவர் கூறுகையில் இந்த கவுரவம் இன்னும் நிறைய நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது, முதுமை காரணமாக முன்புபோல் என்னால் நடமாட முடியவில்லை. ஏழை நோயாளிகள் தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முடிந்தது இதனால் இவர்களுக்கு இந்த கௌரவத்தை அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.