இணையத்தில் வைரலாகும் துப்பறிவாளன் படத்தின் டீஸர் மற்றும் ஃர்ஸ்ட் லுக்...! அதில் கலந்து கொள்ளும் அந்த பிக் பாஸ் சீசன் 4 பிரபலம் யார் தெரியுமா...?

இணையத்தில் வைரலாகும் துப்பறிவாளன் 2 படத்தின் டீஸர் மற்றும் ஃர்ஸ்ட் லுக்…! அதில் கலந்து கொள்ளும் அந்த பிக் பாஸ் சீசன் 4 பிரபலம் யார் தெரியுமா…?

Actress Cinema News videos

மிஸ்கின் இயக்கத்தில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில், விஷால் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் தான் ‘துப்பறிவாளன் 2’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் மிஸ்கின் இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். இதனால் விஷாலே இந்த படத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் பிக்பாஸ்4 பிரபலம் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, பிக்பாஸ் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதாவது விஷால் இயக்குனராக பொறுப்பேற்ற பின்பு ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு இன்றளவும் நடைபெறவில்லை. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வந்தது.

ஏற்கனவே இந்தப் படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு நவம்பர் மாதம் 9ம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் இந்தப்படத்தில் அக்ஷயா, ரகுமான், கௌதமி, பிரசன்னா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடன் பிக்பாஸ்4 பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிக்கவுள்ளாராம்.

எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் மொட்ட சுரேஷ் சக்கரவர்த்தியை, வெள்ளித்திரையில் காண பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.