பிரசவத்திற்கு பின்னர் எப்போது தாம்பத்தியம் வைத்து கொள்வது நல்லது..?

Uncategorized

இயற்கை முறையில் சுகபிரசவம் அல்லது சிசேரியன் மூலம் பிரசவம் இவை இரண்டில் எந்த பிரசவத்திற்கு பின்னர் எப்போது தாம்பத்தியம் வைத்து கொள்வது நல்லது என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அப்படி உடலுறவு கொண்டால் என்ன ஆகும்? உடலுறவு கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே எழும் ஒரு பொதுவான சந்தேகங்களாகும். பலருக்கும் கர்ப்ப காலத்தில் இந்த ஆசைகள் இருந்தாலும் யாரிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவது என்ற தயக்கம் இருக்கும்? இதை போய் யாரிடம் கெட்டு தெரிந்து கொள்வது என்ற கூச்சம் இருக்கும். அத்தகையவர்கள் மேற்கொண்டு இந்த பதிவை படியுங்கள்.

கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். கருவானது கருப்பையில் சரியாகப் பதிந்து இருக்காது என்பதால் அந்த நேரத்தில் உடலுறவு மேற்கொண்டால் உடலளவில் வலு குறைந்த பெண்களுக்கு கருச்சிதைவு (Abortion) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த சமயத்தில் மசக்கை காரணமாக பெண்களுக்கு வாந்தி, குமட்டல், சோர்வு காரணமாக உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடலாம் என தோன்றினால் தாரளமாக ஈடுபடலாம். இந்த சமயத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பெண்ணின் வயிற்றை அழுத்தாத வகையில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதே. இதற்க்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, ரத்த கசிவு இருந்தாலோ உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

முதல் மூன்று மாதங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால் அடுத்து வரும் நான்கு முதல் எட்டு வரையிலான மாதங்களில் அதிக அசௌகரியம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். சொல்ல போனால் 8-ம் மாதங்களில் உடலுறவு கொள்ளவே பெண்கள் விரும்புவார்கள். அதேபோல், ஒன்பதாவது மாதத்தில் உடலுறவை அறவே தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கோ, அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கோ எந்தவிதமான இன்பெக்ஷனும் ஏற்பட கூடாது என்பதால்.

இயற்கை முறையில் சுகபிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2 மாதத்திற்கு பிறகு உடலுறவு கொள்வதே நல்லது. அதுவே உங்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2.5 மாதங்களுக்கு பிறகு உடலுறவு கொள்ளலாம். ஆனால் அதற்குள் உங்களுக்கு பிரசவ சமயத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிட்டதா என நன்கு சரி பார்த்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி இருக்கும். ஆனால் அது நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும்.-Source: maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *