ஒரே குஷியாக இருக்கும் அண்டை மாநில ரசிகர்கள்...! ஏனென்றால் தியேட்டர் திறந்து விட்டதால் விஜய்யின் அந்த மாஸ் படத்தை திரும்பவும் ரிலீஸ் செய்து உள்ளனர்...! என்ன படம் தெரியுமா...!

ஒரே குஷியாக இருக்கும் அண்டை மாநில ரசிகர்கள்…! ஏனென்றால் தியேட்டர் திறந்து விட்டதால் விஜய்யின் அந்த மாஸ் படத்தை திரும்பவும் ரிலீஸ் செய்து உள்ளனர்…! என்ன படம் தெரியுமா…!

Actress Cinema News videos

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பின்படி சமீபத்தில் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. அவற்றில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையும் ஒன்று.

புதுவையில் உள்ள திரையரங்குகள் அக்டோபர் 15 முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முதல் படமாக தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அட்லி-விஜய் கூட்டணியில் உருவான மூன்றாவது வெற்றிப் படமான இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ’மாஸ்டர்’ உள்பட எந்த புதிய திரைப்படங்களும் திரைக்கு வெளியாகாத காரணத்தால் விஜய்யின் ‘பிகில்’ படம் திரையிடப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று அந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

புதுவை மாநில எல்லையில் உள்ள தமிழக நகரங்களில் இருந்தும் இந்த படத்தை பார்க்க புதுவை சென்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *