திடீரென மீனா கணவரின் இறப்பில் எழுந்த சந்தேகம்...!! நைனிகாவுடன் போனில் கடைசியாக பேசிய வார்த்தை!! அதைக் கேட்டு கதறி அழும் குடும்பத்தினர்…!

திடீரென மீனா கணவரின் இறப்பில் எழுந்த சந்தேகம்…!! நைனிகாவுடன் போனில் கடைசியாக பேசிய வார்த்தை!! அதைக் கேட்டு கதறி அழும் குடும்பத்தினர்…!

Actress

கண்ணழகி என்றால் அது நடிகை மீனா தான். அவரின் அழகிய கண்களுக்கு என்றே சினிமாவில் அநேக ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை மீனா. தனது தேர்ந்த நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக 90S ஹிட்ஸின் கனவு கன்னியாக இருந்தவர் என்று கூட சொல்லலாம்.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 12ல்  பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகருக்கும்  இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடைபெற்றது. இவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளார்.

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இந்த எதிர்பாராத இழப்பிற்கு உறவினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது கடந்த ஒரு வார காலமாக உயிருக்கு போராடிய இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகினரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் மீனா கணவரின் மரணத்தில் தற்போது பல விதமான சந்தேகங்களும் எழுந்துள்ளது. அவருடைய மரணத்துக்கு உண்மையான காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் புறாவின் எச்சம் பட்டு வந்த காற்றை சுவாசித்ததால் தான் முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதுவும் கடந்த புத்தாண்டு அன்றே இவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தொழிலதிபரான இவர் புறாவின் எச்சம் பட்டு வந்த காற்றை சுவாசித்ததால் தான் இறந்தார் என்றும் சொல்வது அனைவருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதிலும் இவர் இறந்தது கொரோனாவிலா? அல்லது புறாவின் எச்சம் மீது பட்டு வந்த காற்றை சுவாசித்தனாலா? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஒரு உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.

அதேபோல இவரது உடலில் காயங்களும் அதிக அளவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வரும் இவரது உடலில் எப்படி திடீரென காயங்கள் ஏற்பட்டது? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே கடந்த ஆறு மாத காலமாக இவர்களுக்குள் மனக்கசப்பு இருந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மீனாவும் அவரது கணவரிடம் பேசி நான்கு மாதங்கள் ஆகிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது .

இந்த நிலையில்தான் மீனாவின் கணவர் இறப்பதற்கு முன்பு தனது மகள் நைனிகாவுடன் கடைசியாக ஒரு சில விஷயங்களை பேசியுள்ளார். அதாவது அப்பா பிழைப்பது கடினம் என்றும் நீ சமத்தா அம்மா பேச்சைக் கேட்டு நடந்து கொள் என்றும் கூறிவிட்டு மகளுக்கும் தொலைபேசி வாயிலாகவே முத்தங்களை கொடுத்து விட்டு காலை கட் செய்துள்ளாராம். இவர் இறப்பதற்கு முன்பு தனது மகளிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் இதுதான் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.