அடடே!! இன்னும் 14 நாளில் மீனா வீட்டில் நடக்கவிருந்த கொண்டாட்டம்! அதற்குள் கணவர் இறந்த சோகம்...!! என்ன விசேஷம் தெரியுமா...?

அடடே!! இன்னும் 14 நாளில் மீனா வீட்டில் நடக்கவிருந்த கொண்டாட்டம்! அதற்குள் கணவர் இறந்த சோகம்…!! என்ன விசேஷம் தெரியுமா…?

Actress

நடிகை மீனா தனது கணவருடன் இன்னும் 14 நாளில் தங்களது திருமண நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகையாக வலம் வந்த மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து பெங்களூரில் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர்.

டாப் ஹீரோயினாக இருந்த மீனா தற்போது பிரபலமான துணை நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் மீனா. இந்நிலையில் அவரது கணவரான வித்யாசாகர் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  மேலும் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்னும் 14 நாட்களில், தங்களின் 13 வது ஆண்டு திருமண நாளை மீனா மற்றும் வித்யாசாகர் ஆகியோர் கொண்டாட இருந்த நிலையில், கணவர் வித்யாசாகர் மரணமடைந்த சம்பவம், பலரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.