சற்றுமுன் மூத்த நடிகர் மரணம்..!! இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்..!! வருத்தத்தில் குடும்பத்தினர்…!!

death news

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை குறைவாலும், நோய் தொற்றின் காரணமாகவும் பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். ஒரு சிலர் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றார்கள். அப்படி ஒரு நிலையில் சற்று முன் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 88  வயது ஆகின்றது. இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சினிமாவில் சண்டை கலைஞராகவும் இருந்து வந்துள்ளார்.

மேலும் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராஜா என்பவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் சண்டை கலைஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இவர் தி.மு.கவின் முன்னாள் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இவருக்கு வயது ஆன காரணத்தினாலும், உடல்நலக்குறைவு காரணத்தினாலும் இன்று அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இவரது உடலுக்கு திரை உலக பிரபலங்களும், தி.மு.கவின் உறுப்பினர்களும்  இவரது உடலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…