இந்த 18 வயது நடிகை தான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்… அந்த நடிகை யார் தெரியுமா…?

Actress Cinema News

சின்னத்திரையில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் ஜொலித்துக்கொண்டு இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பிரின்ஸ்.

இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே.21 படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களுக்கு பின், அஸ்வின் என்பவரின் இயக்கத்தில் தனது எஸ்.கே. 22 படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். அஸ்வின் இதற்குமுன் யோகிபாபுவை வைத்து மண்டேலா எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கப் போகிறாராம். இதற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் பிரியங்கா மோகன் இருவரையும் இயக்குனரிடம் சிபாரிசு செய்தது சிவகார்த்திகேயன் என்பதால், கீர்த்தி ஷெட்டி தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனரிடம் சிவகார்த்திகேயனே கூறியிருப்பார் என்று ஒரு புறம் கிசுகிசுப்போய்க்கொண்டி இருக்கிறது.