ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மானிற்கும், ரியாஸ் உதீன் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
திருமண தம்பதிகளின் புகைப்படத்தை ரகுமான் வெளியிட்டு அவர்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.