பிருத்திவி ராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான கேங்ஸ்டர் படம் லூசிஃபர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்தது என்று கூறலாம். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
மோகன்லாலுடன் விவேக் ஓபராய், மஞ்சுவாரியர், டோவினோ தாமசு, சாய்குமார், விஜய் சந்தோஷ் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் உருவானது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவி ராஜ் முடிவு செய்துள்ளாராம். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தற்போது மோகன்லால் மற்றும் பிருத்திவி ராஜ் கூட்டணியில் ‘ப்ரோ டாடி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படம் பிருத்திவி ராஜ் மகள் நான்கு வரியில் எழுதிய கதையை வைத்து உருவாக்கப்படுகிறது.
அதாவது இரண்டாம் உலகப்போரில் அகதிகளாக இருக்கும் அப்பா மக்களுக்கான பாசத்தை வைத்து குடும்பப்பாங்கான திரைப்படமாக எடுக்க உள்ளனர். திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகத்திலும் மோகன்லால் மற்றும் மீனாவின் ஜோடிப்பொருத்தம் அற்புதமாக அமைந்தது.
திரிஷ்யம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் ‘ப்ரோ டாடி’ இந்த படத்திற்காக மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவை போடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.