தீடீரென்று கொட்டிய மழை...! எந்த ஊரில் தெரியுமா...? வெள்ளத்தால் அபாயம்...!

தீடீரென்று கொட்டிய மழை…! எந்த ஊரில் தெரியுமா…? வெள்ளத்தால் அபாயம்…!

News videos

ஹைதராபாத் நகரில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. நகரின் பெரும்பாலான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கி, வாகனங்கள் மிகவேகமான நீரோட்டங்களில் அடித்துச் செல்லப்பட்டன. ஹைதராபாத்தின் சில பகுதிகள் மட்டுமின்றி நகரை ஒட்டிய பல பகுதிகளையும் இம்மழை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் கனமழை காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளன, இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் சில பகுதிகளில் நாள் முழுவதும் 150 மி.மீ க்கும் அதிகமான கனமழை பொழிந்தது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாதாரணமாக இயங்கிக் கொண்டு இருந்த ஒரு பரபரப்பான சாலை சில மணி நேரங்களில் தண்ணீரில் மூழ்கும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான காட்சியை தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ளது. அந்தக்காட்சி வெள்ளத்தின் கோரத்தை காட்டுவதாக இருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் முக்கிய நகர் பகுதிகளில் வெள்ளநீர் சரசரவென ஏறி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வெள்ளநீரில் பல பொருட்கள் மிதந்து செல்கின்றன.

ஹைதராபாத் வெள்ளத்தில் 35ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.