எந்த நடிகரிடமும் இல்லாத பழக்கம் அஜித், கவுண்டமணிகிட்ட மட்டும் இருக்கு…. அப்படி என்ன தான் இருக்கு தெரியுமா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!! ரியல் சூப்பர் ஸ்டார்ஸ் இருவரும்.!!

Actress Cinema News

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர்க நடிகர் அஜித்குமார். இவர் ஆரம்ப காலத்தில் தனக்கு முன்கோபம் அதிகம் எனவும் அது மட்டுமில்லாமல் மனதில் தோன்றியதை பேசி விடுவேன் என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அஜித்தின் திரைவாழ்க்கையில் அவரது ரசிகர்கள் முக்கியமானவர்கள் காரணம் மற்ற நடிகர்களைவிட  அஜித் அதிகப்படியான தோல்வி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அப்போதும் அஜித்திற்கு துணையாக அவரது ரசிகர்கள் நின்றனர். அதனால் தான் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் காலப்போக்கில் அஜித் மேல் உள்ள அன்பு ரசிகர்களுக்கு அதிகமாகியது. இதனை பார்த்த அஜித் குமார் தன்னை மட்டும் நம்பி யாரும் இருக்கக்கூடாது. அவரவர் வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் எனக் கருதி தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என கூறினார்.

அதன்பிறகுதான் அஜித்திற்கு ரசிகர் மன்றங்கள் இல்லாமல் படங்கள் வெளிவர தொடங்கின. இதேபோல் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி சினிமாவில் பிரபலமாக இருந்த போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார்.

சினிமாவில் பிரபலமாகி விட்டால் ரசிகர்கள் உடனே அவர்களுக்கு மன்றம் வைக்கத் தொடங்கி விடுவார்கள். இதேபோல் கவுண்டமணிக்கும் ரசிகர் மன்றம் வைக்க ரசிகர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் கவுண்டமணி தனக்கு அதில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இதுவரைக்கும் கவுண்டமணி மற்றும் அஜித்குமார் மட்டுமே ரசிகர் மன்றம் தங்களுக்கு வேண்டாம் என கூறியுள்ளார்கள். மேலும் எந்த ஒரு நிகழ்ச்சி விழாவிற்கும் இருவரும் ரொம்ப செல்ல மாட்டார்கள். ரசிகர்களை ஏன் தொந்தரவு பண்ண வேண்டும் என்ற எண்ணம் தான்.

நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படி தான் சினிமாவிலும் இவர்கள் இருந்துள்ளனர். அஜித் குமார் தற்போது முன்னணி நடிகராக இருப்பதால் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.