40 வயதிலும் கவர்ச்சி காட்டும்நடிகை… அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்ல… எந்த மாதிரி… யார் தெரியுமா…?

Actress image news

நடிகை கிரண் ரத்தோட் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2002ல் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், அரசு, வின்னர் என பல படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கிரண் விக்ரம், விஜய், அஜித், பிரசாந்த், கமல் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருடைய கவர்ச்சிகரமான நடிப்பால் பல ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். கிரணின் கவர்ச்சிக்காக மட்டுமே ஓடிய படங்களும் உண்டு.

இவருக்கு கவர்ச்சி நாயகி என்ற அங்கீகாரம் கிடைத்தது பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் தான். இப்படம் முழுவதும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டாலும் கிரணால் தான் இப்படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

கிரண், கார்த்தி நடிப்பில் உருவான சகுனி படத்தில் வில்லியாக வசுந்தரா தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய் படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கிரண் ஆரம்பத்திலிருந்து கவர்ச்சியான வேடத்தில் நடித்ததால் இதுவரை குடும்பபாங்கான கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது சற்று குண்டாக உள்ள கிரண் எடையைக் குறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கிரண் தன்னுடைய 40 வயதிலும் கவர்ச்சிகரமான உடைகள் அணிந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனால் இவருடைய இன்ஸ்டால் பக்கத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் குவிகிறார்கள்.