குழந்தை இருப்பதாக நினைத்து சிகிச்சை அளித்த மருத்துவர்..!! ஸ்கேனில் தெரிய வந்துள்ள அ திர் ச்சி உ ண்மை..!! என்ன ஆனது என்று பாருங்கள்..!!

குழந்தை இருப்பதாக நினைத்து சிகிச்சை அளித்த மருத்துவர்..!! ஸ்கேனில் தெரிய வந்துள்ள அ திர் ச்சி உ ண்மை..!! என்ன ஆனது என்று பாருங்கள்..!!

News

பொதுவாகவே திருமணத்திற்குப் பிறகு பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது இயல்பான ஒரு விஷயம் தான். அந்த நேரத்தில் அந்தப்பெண் மட்டும் அல்லாமல் வீட்டில் உள்ள அனைவருமே  மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால், அது ஏதோ ஒரு காரணத்தினால் பிரச்சனை  ஏற்பட்டு  குழந்தை பிறக்கவில்லை என்றால்

அந்த சோகம் அந்தப் பெண்ணை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த குடும்பத்தையும் சோகத்தில்  ஆழ்த்தி விடும். அதுபோன்ற ஒரு பெண்ணின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது வயிற்றில் கட்டி இருந்தவுடன் அது குழந்தைதான் என்று சிகிச்சை அளித்த மருத்துவர்.

அதன் பிறகு 7 மாதங்கள் சிகிச்சை அளித்தபின் நடந்த கொடூரம் என்ன தெரியுமா.? வயிற்றில் கட்டியோடு சிகிச்சைக்கு போன பெண் ஒருவருக்கு கடந்த, 7 மாதங்களாக கர்பமாக இருக்கிறோம்  என்று நினைத்து தவறாக புரிந்து கொண்டு சிகிச்சை அளித்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் தான் வேடியப்பன் என்பவர். இவர் கூலி வேலை செய்து தினமும் வாழ்க்கையே ஓட்டுபவர் இவருக்கு அஸ்வினி என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு வயது 22 ஆகும்.

கடந்த, மார்ச் மாதம் அன்று வீட்டிற்கு அருகே உள்ள அரசு ஆரம்ப நிலையத்திற்கு சென்று சிகிச்சை  பார்த்துள்ளார் வேடியப்பனின் மனைவி அஸ்வினி. அப்போது தான் அவருக்கு தெரியும் கர்ப்பமாக  இருக்கிறோம் என்று அங்குள்ள மருத்துவர்கள் சொன்னார்கள். அதை கேட்ட அந்த தம்பதியர்கள் சந்தோசம் அடைந்துள்ளார்கள்.

அவருக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பிணி பெண்ணுக்கு போடக்கூடிய தடுப்பூசி மற்றும் மாதாந்திர  பரிசோதனை மற்றும் மாத்திரை வழங்கப்பட்டது. அவர்கள் கடந்த 19ம் தேதி மருத்துவமனைக்கு  சென்றார். அவருக்கு கடும் வயிற்றுவலி இருப்பதனால் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள்.

அவரின் வயிற்றில் குழந்தையே அல்ல வெறும் நீர்கட்டி என அந்த ஸ்கேனிங் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு உடனே இன்னொரு ஸ்கேன் செய்யும் மையத்திற்கு சென்று பார்த்தனர். அவர்களும் குழந்தை இல்லை நீர்கட்டி தான் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு உடனே அஸ்வினியும் அவரின் உறவினர்களும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு  சென்று மருத்துவர்களிடம் கேட்டனர். அதற்கு அந்த மருத்துவர் கூறியது என்னவென்றால் ‘சாரி தெரியாம  நடந்திருச்சு’ என ஜாலியாக கூறியுள்ளார்கள்.

அந்த கர்ப்பத்திற்கும் நீர்கட்டிற்கும் வித்தியாசம் கூட  தெரியாமல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஸ்வினியும் அவர் குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர். இது போன்று தவறுகள் இனிமேல் மருத்துவமனையில் நடக்க கூடாது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்…