ரசிகரை அன்போடு கட்டித் தழுவிய நடிகர் அஜித்… இவ்வளவு எளிமையான மனிதரா என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…!! வைரல் வீடியோ!!

Actress News videos

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வர, போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் First லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

அதே போல் அடுத்ததாக இப்படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். நடிகர் அஜித் சமீபத்தில் பைக் போட்டி ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசளித்தார்.

இந்நிலையில், அங்கு தல அஜித்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவரை, நடிகர் அஜித் அன்போடு கட்டித்தழுவும் அழகிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த தல ரசிகர்கள், டுவிட்டரில் இதனை வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..