38 வயதில் காதல் திருமணம் செய்யும் பிரபல நடிகை த்ரிஷா..!! மாப்பிளை யார் தெரியுமா..?? அவரை திருமணம் செய்ய வருப்புடுத்தும் அவரது குடும்பம்..!!

Actress image news News

தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் நீண்ட காலங்கள் நிலைப்பதில்லை. ஆனால் இதற்கு மாற்றாக நடிகை நயன்தாராவும், த்ரிஷாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

வயதானாலும் இவர்களுக்கான மார்க்கெட் தற்போது வரை இருந்து கொண்டு தான் உள்ளது. இதில் நயன்தாரா தனக்கென நிலையான மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார்.

ஆனால் திரிஷா சற்று தடுமாறி வருகிறார் என்றுதான் கூறவேண்டும். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு படங்களும் வெற்றி பெறவில்லை.

அதேபோல் நயன்தாரா தேர்வு செய்வது போலவே திரிஷாவும் சோலோ நாயகி படங்களை தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.

தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கி வந்ததால் தற்போது திரிஷா முன்னணி நடிகை இடத்திலிருந்து சற்று கீழே இறங்கி உள்ளார். இவருக்குப் பின்னால் வந்த நடிகைகள் த்ரிஷாவின் இடத்தை பிடித்து விட்டனர்.

தற்போது திரிஷா கைவசம் தமிழில் 4 படங்களும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்களும் என 6 படங்கள் உள்ளன. இப்படங்கள் வெளிவந்தால் மட்டுமே த்ரிஷாவின் மார்க்கெட் நிலைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

இந்நிலையில் தற்போது 38 வயதாகும் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

ஆனால் நடிகை திரிஷாவோ, “நான் திருமணம் செய்தால் காதல் திருமணம்தான் செய்வேன்” என அடம் பிடித்து வருகிறாராம். இந்த வயதில் காதல் திருமணமா என குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

பல நடிகர்களுடன் இணைத்து திரிஷா கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது காதல் திருமணம் செய்வேன் என கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.