குழந்தையுடன் ராஜா ராணி சீரியல் வெளியிட்ட புகைப்படம்... குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா? இப்படி ஒரு பெயரையா வைத்திருக்கிறார்...!! இப்பபை

குழந்தையுடன் ராஜா ராணி சீரியல் வெளியிட்ட புகைப்படம்… குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா? இப்படி ஒரு பெயரையா வைத்திருக்கிறார்…!! இப்பபை

Actress image news News

பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் தனது செல்ல மகளுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளனர். பிரபல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் போதிய வாய்ப்பின்மையால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களைக் கவர்ந்தார். வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளதோடு, தற்போதும் சில சீரியல்களில் நடித்து வருகின்றார்.

இதற்கிடையே ஒளிப்பதிவாளர் அசோக் சின்தலாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், கர்ப்பமாக இருந்த இவர் சமீபத்தில் பெண் குழந்தையினை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் இந்த குழந்தை நேற்று பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார் ஸ்ரீதேவி. சித்தாரா என்று குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விழாவின் புகைப்படங்களை நடிகை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.