64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்...!! இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே.... இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்...!!

64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்…!! இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே…. இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Actress image news News

மலையாள முன்னணி நடிகர் முகேஷ் விவாகரத்து குறித்த தகவல் வெளியானதில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 1988-ம் ஆண்டு நடிகை சரிதாவை திருமணம் செய்த இவர், 2011-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

பின்னர் 2013-ம் ஆண்டு பரத நாட்டிய கலைஞர் தேவிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார் முகேஷ். இந்நிலையில், முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் தற்போது முறிவு ஏற்பட்டு உள்ளது.

விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து இருவரும் குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து தேவிகா கூறும்போது, “முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது.

எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என்று கூறியுள்ளார்.