மெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா.? அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.? வெளியான தகவல் இதோ..!!

மெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா.? அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.? வெளியான தகவல் இதோ..!!

Actress Cinema News image news

விஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளைய தளபதி” என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.

தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். அதன் பிறகு விஜய் பல படங்கள் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் வைகைப் புயல் வடிவேலு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் விஜய் கேரக்டரின் போது ஜூனியர் வடிவேலு கேரக்டரில் நடித்துள்ளார் 10வது வகுப்பு படிக்கும் ராஜமாணிக்கம் என்ற மாணவர்.

இவர் ராசிபுரம் அருகே சின்ன கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்,‘மெர்சல்’ படத்தில் வடிவேலுவின் சிறுவயது கேரக்டரில் நடிக்க ஆள் தேவை என்ற செய்தி அறிந்து ஆடிசனில் கலந்து கொண்டுள்ளார். வடிவேலுவின் சிறு வயது தோற்றம் அப்படியே இருக்க, இவரை பார்த்தவுடன் அட்லி தேர்வு செய்துவிட்டாராம். விஜய்யின் தீவிர ரசிகரான ராஜமாணிக்கம், முதல் நாளிலேயே விஜய்யுடன் நடித்துள்ளார். ராஜஸ்தான், சென்னை என விஜய்யுடன் ஐம்பது நாட்கள் நடித்த ஜூனியர் வடிவேலு, விஜய்யும் அட்லியும் தனது நடிப்பை பாராட்டியதாகவும், இருப்பினும் இது படிக்க வேண்டிய காலம், எனவே படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறியதாகவும் பேட்டியில் கூறி இருந்தார்.

தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறிய ராஜமாணிக்கம் தொடர்ந்து படிப்பில் தீவிர கவன ம் செலுத்தவுள்ளதாக கூறியிருந்தார். சமீபத்தில் இவர் வடிவேலுவின் சொந்தம் தான் என் று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் சாயலில் தான் அவர் இருக்கிறார். வடிவேலுக்கு உறவு இல்லை என்றெல்லாம் பலரும் கருத்துகளை தெரிவித்தது வருகின்றனர்.