திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்த பிரபல விக்ரம் பட நடிகை... தற்போது தனது காதலனை பிரிகிறாரா? எதனால் தெரியுமா...? குழந்தையின் நிலைமை...?

திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்த பிரபல விக்ரம் பட நடிகை… தற்போது தனது காதலனை பிரிகிறாரா? எதனால் தெரியுமா…? குழந்தையின் நிலைமை…?

Actress image news News

நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலமாக அவர் தனது வாழ்க்கை துணையை பிரியப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் பரவி வருகின்றன. ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த நடிகை எமி ஜாக்சன் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த இவர், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படம் எமி ஜாக்சனை உலகளவில் பிரபலமாக்கியது.

2015ல் அந்த படம் வெளியான நிலையில், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயிட்டு மற்றும் எமி ஜாக்சன் காதலிக்க ஆரம்பித்தனர். கடந்த 2019ம் ஆண்டு எமி ஜாக்சன் கர்ப்பமானார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் கர்ப்பமானதை அறிவித்ததை அடுத்து மே மாதமே இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் பார்ட்னர்களாக வாழ்ந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் எமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் இருவரும் அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

ஆண்ட்ரியாஸ் என தனது மகனுக்கு எமி ஜாக்சன் பெயர் வைத்து குழந்தையை வளர்க்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகிய நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக கூறியிருந்த அவர் தற்போது தனது பார்ட்னர் ஜார்ஜ் பன்னாயிட்டுவை பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் தான். கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் எமி ஜாக்சன்.

குழந்தை பிறந்ததும் தான் தங்களுக்குள் உறவு மிகவும் நெருக்கமானது என பேட்டி அளித்திருந்த இவர், தற்போது தானும், குழந்தையும் இருக்கும் புகைப்படத்தினை மட்டும் வைத்துவிட்டு ஜார்ஜின் புகைப்படத்தினை தேடி தேடி அழித்து வருவதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பினை நடிகை எமி ஜாக்சன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.