மளிகை கடையில் மக்கள் செல்வன்! வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜாலியான வீடியோ

மளிகை கடையில் மக்கள் செல்வன்! வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜாலியான வீடியோ

Actress News videos

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாது இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கும் நவரசா வெப் தொடரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

மேலும் சன் டிவியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியின் ப்ரோம் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங்கிற்கு காரைக்குடி சென்றுள்ள விஜய் சேதுபதி அங்குள்ள மல்லிகை கடையில் அமர்ந்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.