இருவருக்குமே கொரனோ உறுதி! ம றைந்த நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை ஆ ட்டிப்படைக்கும் சோ கம்! அ திர்ச்சியில் ரசிகர்கள்!

News

கன்னட சினிமாவின் பழம்பெரும் நடிகர்  சக்திபிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுனின் மிகநெருங்கிய உறவினர் ஆவார்.  4 வருடங்களாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்த அவர் கதாநாயகனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா கடந்த 10ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை மேக்னா ராஜை கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் அவர் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா தி டீர் மூ ச்சு தி ணறல் மற்றும் நெ ஞ்சுவ லி கார ணமாக கடந்த மாதம் திடீர் மர ணமடை ந்தார்.அவரது மர ணம்  ரசிகர்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் சிரஞ்சீவி இ றந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு  நினைவேந்தல் நடைபெற்றது.

இந்நிலையில் சிரஞ்சீவியின் தம்பி  துருவா சார்ஜா குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா டெஸ்டில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. எங்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அதனால் நாங்களே மருத்துவமனையில் சேர முடிவெடுத்தோம்.நாங்கள் நலமுடன் திரும்ப வருவோம் என உறுதியாக இருக்கிறேன். எங்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து  கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் துருவா சார்ஜா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.