அந்த 21 வயது நடிகையை ஓகே பண்ணிடுங்க.. ஆர்டர் போட்ட 60 வயது நடிகர்! யார் அந்த நடிகர் தெரியுமா…?

Actress Cinema News image news

சினிமாவை பொறுத்தவரை ஹீரோவுக்கு எவ்வளவு வயது இருந்தாலும், ஹீரோயினுக்கு என்னமோ 20+ தான் வயது இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இப்படி தான் இருந்து வருகிறது.

சமீபத்தில் தான் இந்த சூழ்நிலை மாறி ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்து நடித்திருந்தனர். தர்பாரில் ரஜினி நயன்தாராவுடனும், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வித்யா பாலனுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

இருப்பினும் ஒரு சில ஹீரோக்கள் தங்கள் படங்களில் இளம் கதாநாயகிகள் தான் வேண்டும் என இயக்குனர்களிடம் அடம்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இதேபோல் ஒரு ஹீரோ அடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த அம்முவையே நடிக்க வைத்துள்ளனர். வெங்கடஷுக்கு 60 வயது ஆகிய நிலையில், அம்முவுக்கு வெறும் 20 வயது தான்.

இளம் வயது தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மாரியம்மா கதாபாத்திரத்திற்கு அம்முவை தவிர வேறு யாருமே செட்டாக மாட்டார் என்று நடிகர் வெங்கடேஷ் அடம்பிடித்து அந்த நடிகையை நடிக்க வைத்துள்ளாராம்.