நடிகை கெளதமியின் கணவர் இவர்தானா? முதன் முதலாக வெளியான திருமண புகைப்படம்..!

நடிகை கெளதமியின் கணவர் இவர்தானா? முதன் முதலாக வெளியான திருமண புகைப்படம்..!

Actress image news News

நடிகை கெளதமி தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம்வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்துக்கே போனவர். அண்மையில் கூட கமலின் மனைவியாக பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

1983ல் கெளதமி வசந்தமே வருக என்னும் படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனார். 1987ல் தெலுங்குப்படம் ஒன்றில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் சந்தீப் பாத்தியா என்னும் தொழிலதிபரை திருமணம் செய்தார். அதன் பின்னர் நடிப்புக்கும் முழுக்குப் போட்டார். தொடர்ந்து படங்களில் நடிப்பதையும் நிறுத்தினார்.

ஆனால் கல்யாணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கணவரை விவாகரத்து செய்தார் கெளதமி. தொடர்ந்து தன் மகள் சுப்புலெட்சுமியோடு சென்னைக்கு வந்து மீண்டும் படங்களில் தலைகாட்டினார். சீரியல்களிலும் நடித்தார். மார்பகப் புற்றுநோயால் தவித்த கெளதமிக்கு கமல் அனுசரணையாக இருந்தார். பத்துவருடங்கள் இருவரும் சேர்ந்து இருந்த நிலையில் மகளின் வருங்காலம் கருதி கமலை விட்டு விலகுவதாக ட்விட் போட்டு பிரிந்தார் கெளதமி.

இந்நிலையில் நடிகை கெளதமி தன் முதல் கணவரோடு மணக்கோலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசிபெறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.