எனக்கு கட்டாயம் பிரியா ஆனந்த் தான் வேண்டும்..!! 3வது முறையாக பிரியா ஆனந்துடன் சேரத் துடிக்கும் 38 வயது நடிகர்..!!

Actress Cinema News image news

பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய படங்களில் பிரியா ஆனந்த் நடித்தால் தனது படங்களின் வெற்றி ராசியாக இருப்பதாக கருதி தான் நடிக்கும் படங்களில் பிரியா ஆனந்த்துக்கு சிபாரிசு செய்து வருகிறாராம். நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் தனக்கென ஒரு நிலையான இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியா ஆனந்த்.

இத்தனைக்கும் முத்தக்காட்சி, நெருக்கமான ரொமான்ஸ் காட்சி என எதுக்கும் முகம் சுளித்தது கிடையாது. இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்டு அப்படியே நடித்துக் கொடுக்கும் சில நடிகைகளில் இவரும் முக்கியமானவர். அப்படிப்பட்ட பிரியா ஆனந்த் தற்போது அறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக வருவதுதான் சோகமே.

இந்நிலையில் தன்னுடைய படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்த கொண்டிருக்கிறாராம் நம்ம மிர்ச்சி சிவா. சென்னை 28 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். பெரும்பாலும் மிர்ச்சி சிவா நடிக்கும் படங்கள் காமெடி களத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவரது படங்கள் மினிமம் கியாரண்டி படங்களாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக பழைய கிளாசிக் படமான காசேதான் கடவுளடா என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அதில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க சிபாரிசு செய்தாராம் சிவா. ஏற்கனவே சிவா, ப்ரியா ஆனந்த் ஜோடி வணக்கம் சென்னை, சுமோ போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.