39 மனைவிகள், 94 குழந்தைகள் என வாழ்ந்த உலகின் மிகப்பெரிய மகிழ்ச்சியான குடும்பத்தின் தலைவர் காலமானார்...! எப்படி தெரியுமா...?

39 மனைவிகள், 94 குழந்தைகள் என வாழ்ந்த உலகின் மிகப்பெரிய மகிழ்ச்சியான குடும்பத்தின் தலைவர் காலமானார்…! எப்படி தெரியுமா…?

death news News

39 மனைவிகள், 89 குழந்தைகள் கொண்ட, உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் காலமானார். உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உடல் நலக் குறைவால் காலமானார்.

வட கிழக்கு மாநிலமான மிசோரமின், பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 89 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் உடல் நலக் குறைவால் காலமாகி விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஜோரம் தங்கா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளமான டுவிட்டரில், முதலமைச்சர் ஜோரம் தங்கா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஜியோனா சனாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம் குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறன். இவ்வாறு அவர் கூறினார்.