பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அதன் பின்னணி குறித்து தெரியவந்துள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை, கனா, தர்மதுரை போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது இவர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வைரலானது, ரகசியமாக திருமணம் நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் கசிந்த நிலையில் அதன் பின்னணி குறித்து தெரியவந்துள்ளது.
அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கண்ணன் இயக்கும், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அப்படத்தில் இவர் திருமணமான பெண்ணாக நடிக்கிறார்.
அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணமாகும் காட்சியை படமாக்கி வந்துள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.