விக்ரம் பிரபுவின் மனைவி யார் என தெரியுமா? இந்த பிரபலமா இவரது மனைவி என கேட்கும் அளவிற்கு வெளிவந்த தகவல்கள் !!ரசிகர்களை ஆச்சயப்பட வைத்த புகைப்படங்கள் உள்ளே!!!

Actress image news News

தமிழ் சினிமாவில் தற்போது பல வாரிசு நடிகர்கள் நடிகர்களாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருப்பினும் இதில் பல வாரிசு நடிகர்கள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் பிரபலமாகாத நிலையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் உள்ளார்கள்.

இப்படி இருக்கையில் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு ஒரு உதாரணமாக விளங்கியவர் சிவாஜி கணேசன் இவரை தொடர்ந்து இவரது மகனான இளைய திலகம் பிரபு அவர்கள் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபல நட்சத்திரமாக உள்ள நிலையில் இவரது மகனான விக்ரம் பிரபுவும் திரைபடங்களில் கதாநாயகனாக வலம் வந்த உள்ளனர்.

பிரபல சினிமா பின்புலத்தை கொண்ட போதிலும் தனது கல்லூரி படிப்பை முடித்து சில காலம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர் முதன் முதலில் 2012-ம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான வெற்றி படமான கும்கி திரைபடத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றதன் மூலம் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமானார்.

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த விக்ரம் பிரபு தனக்கென திரையுலகில் தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகொண்டதோடு தனி ரசிகர் பட்டளாத்தையும் உருவாக்கி கொண்டார். இவன் வேற மாதிரி, அரிமா, சிகரம் தொடு, அசுர குரு போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமா திரையுலகில் பிரபலமாக உள்ள இவரது குடும்ப புகைபடங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது அவர் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

இந்நிலையில் இவருக்கு 2007-ம் ஆண்டு தொழிலதிபரின் மகளான உஜ்ஜயினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள்.  இவ்வாறன நிலையில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த புகைப்படத்தில் விக்ரம் பிரபுவின் மனைவியை பார்த்தால் கதாநாயகியை போல் உள்ளார் என அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.