நடிகர் நகுலுக்கு குழந்தை பிறந்தாச்சு… அத்தை ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நடிகை தேவயானி!

Cinema News

“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின்  தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த  “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.  “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,  “மாசிலாமணி”,  “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.

தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நகுலுக்கு குழந்தை பிறந்து அப்பாவாக ப்ரோமோஷன் வாங்கியுள்ளார். இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளத்தில் குவிந்து வருகிறது.

“பாய்ஸ்” படத்தில் ஜுஜு என்ற பெயரில் வித்தியாசமான கெட்டப்பில் குண்டாக நடித்த நகுலின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சரியான ஹிட் கிடைக்காததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நகுல், எரியும் கண்ணாடி என்ற படம் மூலம் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.

நடிகர் நகுல் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னையில் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து கூறினர்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் கணவன், மனைவி இருவரும் அவ்வப்போது தங்களுடைய போட்டோஸை இன்ஸ்டாகிராமை பகிர்ந்து வருகின்றனர்.

தனது மனைவி கர்ப்பமாக இருப்பதையும், தான் விரைவில் அப்பாவாகப் போவதையும் மிகவும் மகிழ்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து சோசியல் மீடியாவில் நகுல் – ஸ்ருதி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

மேலும் ஸ்ருதிக்கு அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் வளைகாப்பு நடந்த புகைப்படங்களையும் வெளியிட்டு, இருவரும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து நடிகர் நகுலுக்கு நேற்று, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில், அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது, இதனை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்த சந்தோஷத்தை அவர்களுடைய குடும்பமே மிகவும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக நகுலை சின்ன வயதில் இருந்து அம்மா போல் வளர்த்த அவருடைய அக்கா, தேவயானி அத்தை ஆகிய சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டிருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *