விஜய் சேதுபதியுடன் பைக்கில் செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்... இவங்க எப்படி ஜோடி சேர்ந்தாங்கனு கேட்கும் ரசிகர்கள்... யார்னு நீங்களே பாருங்க

விஜய் சேதுபதியுடன் பைக்கில் செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்… இவங்க எப்படி ஜோடி சேர்ந்தாங்கனு கேட்கும் ரசிகர்கள்… யார்னு நீங்களே பாருங்க

Actress Cinema News image news

நடிகர் விஜய் சேதுபதியுடன் பைக்கில் குக் வித் கோமாளி புகழ் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில், கோமாளியாக வலம்வருபவர் தான் புகழ்.

ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை வைத்திருக்கும் புகழின் நகைச்சுவைக்கு ரசிகர்களுக்கு அடிமை என்றே கூறலாம். தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அதாவது புகழ் அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, நடிகர் அருண் விஜய்யின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் புகழ் விஜய் சேதுபதியுடன் பைக்கில் செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.