சிவகார்த்திகேயனின் இந்த பட இயக்குனர் அம்மா கா ல மா னா ர்..!! அந்த இயக்குனர் யார் தெரியுமா..!!

Actress death news image news

நடிகர் விஷ்ணு நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இன்று நேற்று நாளை.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான ரவிக்குமார், தனது முதல் படத்திலே அனைத்து தரப்பான ரசிகர்களையும் கவர்ந்தார்.

மேலும் இவர் தற்போது நடிகர் சிவாகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் மிகவும் வித்தியாசமான முறையில் வேற்றுகிரகவாசி வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை இல்லாதளவு VFX காட்சிகளும் இப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ரவிக்குமாரின் அம்மா காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து பிரபல இயக்குனர் கவுரவ் நாராயணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “என் நண்பர் & இயக்குனர் ரவிக்குமார் அவர்களின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். என் ஆழ்ந்த இரங்கல்கள். RIP” என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.