ஹீரோயின் ஆகும் கௌதமியின் மகள் !! முதல் படமே யார் கூடன்னு தெரியுமா ?? அதுவும் பொண்ணு எவ்ளோ அழகா இருக்குன்னு பாருங்க !!

Cinema News

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை கௌதமி. இவர் கடந்த 1987ம் வருடம் தெலுங்கில் தயமாயுடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து கடந்த 1988ம் ஆண்டு தமிழில் ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் நடித்தார். பின்னர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. கடந்த 1998 ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை கவுதமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் அவர்களுக்கு 1999ம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதே வருடமே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சந்தீப்பாட்டியாவை விட்டு பிரிந்தார்.

அதோடு அவரிடமிருந்து விவாகரத்தும் பெற்றார். அவ்வாறு நிகழ்ந்த சில நாட்களில் கவுதமியின் பெற்றோரும் மரணம் அடைந்தனர். இதனால் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதன்பிறகு நடிகர் கமலுடன் இருந்து வந்த நட்பு காதலாக மாற இருவரும் கடந்த 2005 ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ தொடங்கினர்.

ஏறத்தாழ சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து வந்து விட்டார். இவ்வாறு பிரிந்ததற்கு காரணமாக கவுதமி கூறுகையில் தன்னுடைய மகளின் நலன் கருதி கமலை பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது கவுதமி மீண்டும் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. மகளை நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி ஈடுப்பட்டுள்ளாராம்.அவரின் முதல் படமே தமிழில் ஒரு முன்னணி ஹீரோவுடன்தான் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *