நடுரோட்டில் அமர்ந்த குழந்தை..அசுர வேகத்தில் வந்த லாரி! நொடியில் மாறிய குழந்தையின் வாழ்க்கை.. வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் மிஸ் செய்யக் கூடாத வீடியோ இதோ..

நடுரோட்டில் அமர்ந்த குழந்தை..அசுர வேகத்தில் வந்த லாரி! நொடியில் மாறிய குழந்தையின் வாழ்க்கை.. வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் மிஸ் செய்யக் கூடாத வீடியோ இதோ..

News videos

குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். கிராமப்பகுதிகளில் ஊரும் நிலையில்(தவழ்க்கும்)இருக்கும் பிள்ளை உசுரை எடுக்கும் எனச் சொல்லும் வழக்கமும் இதனால்தான் இருக்கிறது. குழந்தைகள் நாம் கொஞ்சம் கண்ணைத் தப்பினாலும் ஜீட் விட்டுவிட்டு எங்காவது விளையாட ஓடிவிடுவார்கள். குழந்தையை கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

இங்கேயும் அப்படித்தான். அப்போதுதான் நடக்க பழகியிருந்த குழந்தை ஒன்று தன் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்தது. திடீரென அதன் அம்மா கவனிக்காத நேரத்தில் வேகமாக சாலையைக் கடக்கத் துவங்கியது. விறுவிறுவென குழந்தை தார் ரோட்டின் மையப்பகுதிக்கு வந்தது.

அப்போது பெரிய லாரி ஒன்று வேகமாக வந்தது. குழந்தை வருவதைப் பார்த்து லாரிக்காரர் ஸ்லோவாக வர, குழந்தையோ அரசியல்வாதிகள் தர்ணா செய்ய அமர்வது போல் திடீரென நடுரோட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டது.

பிரதானமான அந்த ரோட்டில் வாகனங்களும் அடிக்கடி வரும். இந்நிலையில் அப்போது குழந்தை அமர்ந்ததற்கு எதிர்திசையில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் பைக்கை நிறுத்தினார். பின் சீட்டில் இருந்த வாலிபர் பைக்கில் இருந்து இறங்கி குழந்தையைத் தூக்கி, சாலையோரம் நின்றவர்களிடம் கொடுத்தார்.

இதனிடையில் குழந்தையின் தாய் ஓடிவந்து குழந்தையைப் பெற்றுச் சென்றார். பார்க்கவே, மிகவும் மனதை பதபதக்க வைக்கிறது இந்தக் காட்சி. வீட்டில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி! இதோ நீங்களே வீடியோவைப் பாருங்களேன்..